April 25, 2020
நாளை முதல் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால்கோவையில் பொதுமக்கள்சமூக இடைவெளியை கடைபிடிக்கமால் பொருட்கள் வாங்க குவிந்தனர்.
கோவையில் ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு நாளை முதல் நான்கு நாட்கள் அமலுக்கு வரும் நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அரசு அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நெருக்கமாக நிற்கும் மக்களுடைய காட்சிகள் பார்க்கப்படுகிறது.
மேலும் மதியம் ஒரு மணி வரைக்கும் மட்டும் கடைகள் இருப்பதால் மக்கள் அதிகமான கூட்டம் இருப்பதாக தெரிவித்தனர். போலீசார் அறிவுறுத்திய உத்தரவுகளை மக்கள் பின்பற்றாத அவலமும் கோவையில் பல்வேறு பகுதிகளில் இது போன்று காணப்பட்டது.