• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்வு

April 24, 2020 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை சேர்ந்து 19 பேர் திருப்பூரைச் சேர்ந்த 18 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வைரஸ் தொற்று காரணமாக கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று 7 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்றுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 95 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் இன்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதனால் கோவை மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 38 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி. வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு குணமடைந்தவர்கள் பலங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்து கைகளைத் தட்டி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் எஸ்பி. வேலுமணி,

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தொடர்ந்து செய்து கொடுக்கப்படும். இந்த வகையான உதவிகள் தேவைப்படுகின்றன உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

கோவையைச் சேர்ந்த 5 ஆண்கள் 9 பெண்கள் ஐந்து குழந்தைகள் என 19 பேரும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆண்கள் 8 பெண்கள் என 18 பேரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆண் என 38 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் அவர்கள் அனைவரும் தொடர்ந்து 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க