April 23, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கோயமுத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா,கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசு சட்டப்பிரிவு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
தடைஉத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் யாவும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக கோவை மாவட்ட காவல் துறை சார்பில் காவல் ஆய்வாளர் யமுனா தேவி தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அத்யாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விவசாயிகளுக்கோ, வியாபாரிகளுக்கோ, வாகன உரிமையாளர்களுக்கோ, வாகன ஓட்டுநர்களுக்கோ ஏதாவது பிரச்சனை ஏற்படும் நிலையில் அவர்கள் கோவை மாவட்ட காவல் ஆய்வாளர் யமுனா தேவியை அவரது தொலை பேசி எண்கள்; 9498173173, 9842530382 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனையை தெரிவித்தால் அவர் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அத்யாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கொண்டு செல்லப்பட அனைத்து உதவிகளையும் மேற்கொள்வார்.
எனவே கோவை மாவட்டத்தில் அத்யாவசிய பொருட்களை கையாளும் விவசாயிகளும், வியாபாரிகளும்,வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டுநர்களும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படியாக கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.