April 22, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 662.இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதுவரை 59,023 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 5,978 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,760.மேலும்,155 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159.தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள்,10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.