April 22, 2020
தண்டோரா குழு
குடிநீர் வராததால் ஊரடங்கையும் மீறி சமூக இடைவெளிவிட்டு காத்திருப்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தடாகம் சாலை எம்ஜிஆர் காலனி பகுதியில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அனைவரும் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூட கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் மக்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளிவிட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் தகவலறிந்து வந்த துடியலூர் காவல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதி அளித்து அதன்பின் குடிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் வாரம் ஒரு முறை கண்டிப்பாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பின்பு போராட்டத்தில் ஈட்டுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.