April 21, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. அதில் தமிழகத்தில் இதுவரை 635 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 22,654 பேர் உள்ளதாகவும் மற்றும் அரசு கண்காணிப்பில் 145 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.சென்னையில் மட்டும் புதிதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.அதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.