April 20, 2020
தண்டோரா குழு
கோவை அன்னூரில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1520 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.கோவையை பொறுத்தவரையில் 133 பேர் பாதிக்கப்பட்டு இ. எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,மேட்டுப்பாளையம் – அவினாசி சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த 40 வயது பெண் காவலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வந்துள்ளது அதில் ஒரு மகளிர் காவலருக்கு மட்டும் கொரானா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது அருவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 காவலர்கள் தனிமை படுத்தப்பட்டு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.