April 18, 2020
தண்டோரா குழு
கோவையில் கடந்த 15 நாட்களில் 3 யானைகள், 2 புலிகள் 2 சிறுத்தை உயிரிழந்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை வனகோட்டத்தில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். இதற்கிடையில்,தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் கோவை வனகோட்டத்தில்
வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
சிறுமுகை வனச்சரகம்,பெத்திகுட்டை பீட் வனப்பணியாளர்கள் பீட் வனப்பகுதியை நேற்று
சுற்றி பார்த்து வரும்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அப்போது அங்கு சென்ற போது ஒரு யானை கூட்டம் விரட்டியதை அடுத்து இன்று காலை சுமார் 10 மணி அளவில் வனப்பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் யானை (சுமார் 32 – 35 வயது மதிக்கதக்க)இறந்து இருப்பதை
கண்டு மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து,கோவை வனத்துறை மருத்துவர், சுகுமார், மாவட்ட வன அலுவலர், உதவி வனப்பாதுகாவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர்
இறந்த யானை அனைவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது,யானை வயிற்று போக்கினால் இருப்பது தெரியவந்தது. உடற்கூர் ஆய்வு செய்தபின் உடலை அப்படியே வனத்தில் உள்ள பிற ஊண் உண்ணிகளுக்கு இரையாவதற்க்கு அப்படியே போடப்பட்டு வரப்பட்டது.
கோவையில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை செம்மேடு பகுதியில் இரு யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் காயம்பட்ட யானை உயிரிழந்தது.நேற்று கோவை தடாகம் பகுதியில் 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்தது.அதைப்போல் வால்பாறையில் ஒரு சிறுத்தை உயிரிழந்தது.கடந்த ஏப்ரல் 10ம் தேதி பொள்ளாச்சி வனப்பகுதியில்,விஷத்தை உட்கொண்டதால் இறந்த பன்றியை சாப்பிட்ட 2 புலிகள் உயிரிழந்தன.
இந்நிலையில்,கோவை மாவட்டத்தில் 15 நாட்களில் 3 யானைகள்,இரண்டு புலிகள், இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.