April 18, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் ரேபிட் கிட் மூலமாக பரிசோதனை செய்யும் பணியைக் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்.மே 3 க்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்ப்பார்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தன. தமிழகத்திற்கு வந்த ரேபிட் கிட் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 2000 கிட்டுகள் கோவைக்கு வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் கோவையில் உள்ள ஹாட்ஸ் பாட் பகுதியிலிருந்து அழைத்து வந்த 5 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பணியைக் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
அத்யாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்க கூடாது. விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.முதலமைச்சர் நிவாரண நிதியாக கோவையில் மட்டும் 11 கோடி பெறப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக தமிழக அரசு சார்பில்போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவையில் மட்டும் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களில் 2075 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது.ஏற்கனவே 7 கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
தற்போது கோவைக்கு வந்துள்ள 2000 ரேபிட் கிட் மூலமும் பரிசோதனை தொடரும். முதல் கட்டமாக மட்டுமே 2000 ரேபிட் கிட் வந்துள்ளது. தொடர்ந்து அதிகப்படியான கிட் கோவைக்கு வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.
மேலும்,வருகின்ற 3 ஆம் தேதிக்குள் கோவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ,அவர் தெரிவித்தார்.