April 18, 2020
தண்டோரா குழு
கோவையில் குடிசையமைத்து வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு
ஆட்டோ ஓட்டுநர் சந்திரன் சாலையில் பிரசவம் பார்த்துள்ளார்.
கோவையில் காமராஜர் சாலை துளசி அம்மாள் லே அவுட் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தஇளம்பெண்னுக்கு சாலையிலயே பிரசவம் நடந்துள்ளது. அப்பகுதியில் இருந்த பொதுமக்களே பிரசவம் பார்த்துள்ளனர். தாயும் சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ள நிலையில் பிரசவம் நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வட மாநிலத்தை சேர்ந்த தம்பதி சிங்காநல்லூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.மனைவி கர்பமாக உள்ள நிலையில் சம்பவத்தன்று காலையில் வழி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளனர்.நாடு முழுவதும் ஊரடங்கு என்பதால் போக்குவரத்து வாகங்கள் இல்லாதாக காரணத்தினாலும், ஏழ்மையான நிலையில் இருப்பதால் கையில் பணம் இல்லாத காரணத்தினால் பொடி நடையாக நடந்து சென்றுள்ளனர். திடீரென வழி ஏற்பட்டவுடன் சாலையில் அலறியுள்ளார்.அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் சந்திரன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கு வந்துள்ளார்.ஆனால்,குழந்தையின் தலைபகுதி வெளியே வந்துள்ளது. உடனடியாக அருகில் இருப்பவர்களுடன் இணைந்து அவரே பிரவசம் பார்த்துள்ளார். தகவல் கொடுத்த ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னார் மருத்துவர் உதவியுடன் தொப்புள்கொடி வெட்டப்பட்டு தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தன்று அருகில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பிரசவம் பார்த்த ஆட்டோ ஒட்டுனர் பிரபல எழுத்தாளர்கூட ஒருசில வருடங்களுக்கு முன் அவர் எலுதிய லாக்கப் புத்தகத்தை தழுவி விசாரணை என்ற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.