• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினமும் வெளியில் வருவதை பொது மக்கள் தவிர்த்திட வேண்டும் – கோவை ஆட்சியர்

April 17, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 2000 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் 1800 பேருக்கான முடிவுகள் வந்துள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் 127 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 26 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பபட்டுள்ளனர். 101 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் 18 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக வைக்கப்பட்டு, அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக 2000 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டது .அதில் 1800 பேருக்கு முடிவு வந்துள்ளது. இதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 210 பேருக்கு டெஸ்ட் ரிசல்ட் வரவேண்டி இருக்கின்றது. கோவை மக்கள் ஊரடங்கு நீடிப்பு காலத்தை புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும் தினமும் வெளியில் வருவதை பொது மக்கள் தவிர்த்திட வேண்டும்.
கொரோனா பரவல் இருக்கின்றதா? இல்லையா ? என்பதை ஆய்வு செய்ய மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் மட்டுமே முடியும்.
அவசியம் இன்றி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் ,காவல் துறை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும்,அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சமூக விலகல் 100 சதவீதம் பின்பற்ற வேண்டும்.தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களை போல கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை கொண்டு வரும் சூழ்நிலை இருக்கின்றது.
கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருக்கின்றது. கொரோனா நிவாரணநிதியாக இதுவரை 11 கோடி ரூபாய் வந்துள்ளது.

கிணத்துகடவு பகுதியில் 5 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் ஆராயப்பட்டு வருகின்றது. சிறுவனின் வீட்டின் அருகே இருக்கும் திருமண மண்டபத்திற்கு டெல்லியில் இருந்து வந்த நபர் சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. நிவாரணப்பொருட்கள் அளவு குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க