• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை

April 17, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்,குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் வீடுகள் மற்றும் தனிமைபடுத்த பட்டவர்களின் வீடுகளில் உள்ள குப்பைகளை,சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57,58,64 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு கவச உடையை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம் மற்றும் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மாநில குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் வழங்கினர்.தொடர்ந்து அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் விக்டர் மற்றும் முதல்வர் மெர்சி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க