• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மன் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

April 17, 2020 தண்டோரா குழு

அம்மன் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்,கக சாவடி மாகாளி அம்மன் திருக்கோவில் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் சார்பில் 165 ஏழை முதியவர்ககள் மற்றும் நமது பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நேரில் வீடு தேடி வழங்கப்பட்டது. அதைப்போல் க.க.சாவடி பகுதி குடும்ப அட்டை இல்லாத 60 குடும்பங்களுக்கு இரண்டு கிலோ அரிசி, ஒரு வாரத்துக்கான காய்கறிகள் (10 வகை காய்கறிகள்) நேரில் வழங்கப்பட்டது.

மேலும் 210 நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கான காய்கறிகள் (10 வகை காய்கறிகள்) வீடு தேடி நேரில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் எஸ்.மோகன்குமார் Vao Retd, கே.சண்முகசுந்தரம், சி.அய்யாசாமி ஜெயிலர் ஓய்வு, வே.விஸ்வநாதன், எஸ்.ராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அம்மன் டிரஸ்ட் உணவு வழங்க மதுக்கரை வட்டாட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். ஊரடங்கு முடியும் வரை உணவு, மாத்திரை தொடர்ந்து வழங்கப்படும் என அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க