April 16, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னார்வலருடன் தொடர்பில் இருந்த 72 பேரில், 32 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது முதற்கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், தொப்பம்பட்டியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் டெல்லி சென்று திரும்பிய நிலையில், தன்னை தனிமைபடுத்தி கொள்ளாமல், வீட்டில் உணவு சமைத்து ஆதரவற்றோர், மருத்துவர்கள், காவலர்கள் என பலருக்கும் விநியோகம் செய்துள்ளார். இதனிடையே, அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது.
இதனையடுத்து,அவர் வசித்த கோத்தாரி நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்த 72 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,முதற்கட்டமாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 40 மாதிரிகளின் முடிவுகள் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.