April 16, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மே3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கிற்கிடையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில்,நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சிவப்பு மண்டலமாக
மஹா.,வில் 14, உ.பி.,யில் 13, ராஜஸ்தானில் 12, ஆந்திராவில் 11, டில்லியில் 10 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், தேனி நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், கரூர், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.