April 16, 2020
தண்டோரா குழு
கோவையில் முககவசம் அணியாமல் சென்ற 19 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையை பொறுத்த வரையில் இந்த வைரஸினால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில் கோவையில் முககவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்திரவிட்டார். அதைப்போல் மத்திய அரசும் உத்திரவிட்டது.
இந்நிலையில்,கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமல் சென்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.