April 16, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இரு பயிற்சி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையை பொறுத்த வரையில் இந்த வைரஸினால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர். இவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்த பயிற்சி மருத்துவர்கள் தொடர்பு கொண்ட இடங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிஆர்ஆர்ஐ குவாட்டர்ஸில் இருக்கும் 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லையென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் மற்ற மாணவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.