• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரானா தொற்று பாதிக்கப்பட்டோர் வீட்டைச்சுற்றி 10 அடிக்கு சிமெண்ட் சீட் சுவர் வைக்கும் பணி துவக்கம்

April 14, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டோர் வீட்டைச்சுற்றி 10 அடிக்கு சிமெண்ட் சீட் சுவர் வைக்கும் பணி துவங்கியது.

கொரானா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,கோவையில் கொரானா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கே கே புதூர்,ஆர்எஸ் புரம் துடியலூர், குனியமுத்தூர், போத்தனூர் உள்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளை கோவை மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு பகுதிகளாக அறிவித்துள்ளது.

தற்போது வைரஸ் தொற்று காரணமாக, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடுகளைச் சுற்றி 10 அடிக்கு சிமெண்ட் சீட் சுவர்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதற்கட்டமாக போத்தனூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி தடுப்பணை தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதேபோல், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற தடுப்பு அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இதேபோல் கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளதோடு, அவர்களது வீட்டிற்கு நண்பர்களோ உறவினர்களோ செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதிப்புள்ள வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க