• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு – மோடி

April 14, 2020

21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் 19 நாட்கள் நீட்டித்து
பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலும் பஞ்சாபி மே 1ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 3ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். ஊரடங்கும் மக்கள் படும் சிரமம் எனக்கு புரிகிறது. கொரோனாவினால் ஏற்பட இருந்த பலத்த சேதத்தை இந்தியா தவிர்த்து உள்ளது.
பண்டிகைகளை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். 21 நாட்கள் ஊரடங்கு காரணமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. பொருளாதாரத்தை விட நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம்.

ஏப்ரல் 20ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இழுக்கப்படும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா வைரஸ் தடுக்கும் பணியில் அடுத்த வாரம் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

ஏழை மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் கொண்டுவரப்படும். ஊரடங்கில் சில தளர்வு குறித்து நாளை முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும்.நோய் தொற்று அதிகரித்தால், அதிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.கொரோனாவை பரிசோதிக்க ஜனவரியில் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது தற்போது 220க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க