April 13, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரச்செயலாளர் பீலாராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளனர். தமிழகத்தில் புதிதாக 2 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன.28 நாள் வீட்டுக் கண்காணிப்பு முடித்தவர்கள்-63380.இதுவரை 12746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது.உயிரழப்பு 11 என்ற நிலையில் தொடர்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.