• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை காலை பிரதமர் உரை! – என்ன எதிர்பார்க்கலாம் ?

April 13, 2020 தண்டோரா குழு

பிரதமர் மோடி நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் தேசிய ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. ஆனால்,இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரம்,மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் தாமாகவே வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. எனினும், இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார்.காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார்.தனது உரையில், பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க
வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பை அவர் வெளியடலாம் எனவும் தெரிகிறது.கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும்,இம்முறை ஒட்டு மொத்தமாக ஊரடங்கை அறிவிக்காமல்,கொரோனா பாதிப்பு அடிப்படையில் நாட்டை 3 மண்டலங்களாக பிரித்து ஊரடங்கை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

மேலும்,ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் அதேசமயம் பொருளாதார நடவடிக்கைகள பாதிக்கப்படாமல் தொழில் நிறுவனங்கள் சில நடைபெறவும், மக்கள் வருவாய் இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் சில விதிவிலக்கு மற்றும் அறிவிப்புகளும் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதனால்
பிரதமர் மோடியின் உரை முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க