• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது..!

April 12, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்றார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஏப்ரல் 1ஆம் தேதி 110பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 3 – 102பேர் அதன் பின்னர் அதிகபட்சமாக இன்று 106 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க