April 11, 2020
தண்டோரா குழு
கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் பல்வேறு மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலியானோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவில் லாக்டவுன் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில்,இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் கோரியுள்ளனர். அது குறித்து ஆலோசனை நடத்த இன்று அனைத்து முதல்வர்களுடனும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது, கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமர் மோடியிடம் பல மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.