• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி கிச்சனுடன் இணைந்து செயல்படும் கந்தா உணவகம்

April 9, 2020 தண்டோரா குழு

மோடி கிச்சனுடன் இணைந்து செயல்படும் கந்தா உணவகம்

கோவை சிங்காநல்லூர் பகுதிகளில் தினம் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்க கூடிய மோடி கிச்சன் நிகழ்ச்சி கோவை மாவட்ட பாஜக சார்பில் துவக்கி வைக்கப்பட்டது.

ஆதரவற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோருக்கான உணவு வழங்கும் சேவையை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினரும் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், மற்றும் பீளமேடு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் 500 பேருக்கு தினம் உணவு வழங்கும் வகையிலான மோடி கிச்சன் துவக்க ஏற்பாட்டை சிங்காநல்லூர் கந்தா உணவகம் சார்பில் அதன் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தேவராஜ் பழனிச்சாமி செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார்,

கோவை மாநகரில் மட்டும் 27 இடங்களில் பாஜக சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். இச்சேவை பணியை பாஜகவுடன் இணைந்து கந்தா உணவகமும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க