• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனது சொந்த சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய கோவை ஆட்சியர்

April 8, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சொந்த சேமிப்பு பணம் ஒரு லட்ச ரூபாயைக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் கூட தங்களது சேமிப்பை நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக சொந்த சேமிப்பு பணமான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வழங்கினார். இதுவரை கோவை மாவட்டத்தில் 6.4 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பங்களிப்பாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க