• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

April 4, 2020 தண்டோரா குழு

மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அருகில் குடியிருக்கும் மக்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரொனா எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகரத்திற்குள் சுற்றித்திரிந்த வட மாநிலத்தவர்கள் 52க்கும் மேற்பட்டோர், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் பின்புறமுள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு,வடக்கு வட்டாட்சியர் தலைமையில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தனிமனித இடைவெளி விட்டு மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநிலத்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஆட்சியரை சந்திக்க வந்திருந்தனர். காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அவர்களிடம் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக வடக்கு வாட்டாட்சியர் தெரிவித்ததை அடுத்து களைந்து சென்றனர்.

மேலும் மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 52 பேரில் இரண்டு பெண்கள் உள்ளதாகவும், 4 பேரை ரூமில் வைத்து பூட்டி இருப்பதாகவும் , ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் நிலையில் ,மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் இரவு முழுவதும் இருமுவதாகவும்,தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ஆட்சியரிடம் புகாரளிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க