• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி : உச்ச நீதிமன்றத்தில் தொழில்நுட்பக் குழு ஆய்வறிக்கை தாக்கல்

October 17, 2016 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினரின் ஆய்வு முடிந்ததைத் தொடர்ந்து அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் போதிய நீர்வளம் இல்லாததால் தமிழகம், கர்நாடகம் என இருமாநிலங்களும் பிரச்சினையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா. தலைமையில், மத்திய அரசின் வல்லுநர்கள், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இருமாநிலங்களிலும் மேற்கொண்ட கள ஆய்வின்படி கர்நாடகத்தில் நெல், சோளம், கரும்பு, ராகி பயிரிடுதற்கும் தமிழகத்தில் சம்பா, கரும்பு, மஞ்சள், ராகி பயிரிடுவதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கையில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கர்நாடகத்தில் சில நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. சிலவற்றில் வெகு குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. குறைந்த நீர் ஆதாரம் தேவைப்படும் பயிர்கள்கூட சில இடங்களில் கருகிவிட்டன. தமிழகத்தில் கால்நடைகள் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் சார்ந்த தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடபட்டுள்ளது.

அதே போல் கர்நாடகாவின் மண்டியாவில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இருமாநிலங்களிலும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம், மீன்பிடி துறைகளில் பணியமர்த்துதல் மிகவும் குறைவாக இருக்கிறது.

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் நலனை கர்நாடகாவும், கர்நாடகத்தின் நலனை தமிழகமும், புதுச்சேரியும் மதிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க