• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா

April 3, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளது. 1,580 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3,684 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,780 பேருக்கு பாதிப்பு இல்லை. 7 பேர் வீடு திரும்பிய நிலையில் 484 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க