• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா வார்டு

March 28, 2020 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைகளுக்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த சூழலில், தமிழகம் முழுவதிலும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை ஏற்படுத்தி தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 200 படுக்கை வசதிகளுடன் தனி கட்டிடத்தில் கொரோனா வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் சுதா கூறுகையில்,

கொரோனா வார்டு தனி கட்டிடத்தில் 200 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், மருத்துவர்களுக்கும் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு அனுமதி வழங்கிய உடனே சிகிச்சை அளிக்க தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பி போது பி.எஸ்.ஜி மருத்துவமனை டீன் ராமலிங்கம், மருத்துவர்கள் முரளி, கார்த்திகேயன், ஜெய்வர்த்தனா மற்றும் லாவண்யா ஆகியோர் உடனிருந்தனர்.

__

மேலும் படிக்க