• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்க கோவை எம்.பி நிதி

March 26, 2020 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் தொகுதி மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து,95 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்க ஒதுக்கியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது.இத்தகைய ஆபத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் தொகுதி மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து,95 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்க நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார்.

இதில் குறிப்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்டிலேட்டர்,மல்டி பேரா மானிட்டர், என்.ஐ.வி பிப்பேப்,முக கவசங்கள்,தெர்மல் ஸ்கேனர், பி.பி அப்பேரட்டஸ் உள்ளிட்ட 16 வகையான முக்கிய மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோருக்கு இன்று அளித்தார்.

மேலும் படிக்க