• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் நுழைவதற்கு தடை

March 20, 2020

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸின் எதிரொலியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேச மாநிலங்களின் எல்லைகள் நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

கீழ் கண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்

•அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள்,ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

•இதர சரக்கு வாகனங்கள்

•தவிர்க்க இயலாத காரணங்களாக இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்

பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் பேருந்துகள் எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க