• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்ட ஹீலர் பாஸ்கர் கைது

March 20, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்டு வருவதாக எழுந்த புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

மருத்துவத்துறையை நம்பாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்ற பரபரப்பான கருத்தை வெளியிட்டு கோவையில் கைது செய்யப்பட்டவர் ஹீலர் பாஸ்கர். இவர் ஆங்கில மருத்துவங்கள் வணிக ரீதியானது என்றும் அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை உள்ளது என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.

இந்த நிலையில் இவர் கொரோனா வைரஸ் குறித்தும் அதன் மருத்துவங்கள் குறித்தும் தொடர்ச்சியாக தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.இப்படியிருக்க செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல் பரப்பும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனைத் தொடர்ந்து கோவை நீதிமன்றம் ஹீலர் பாஸ்கருக்கு ஏப்ரல் 3ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விடுத்துள்ளது.

மேலும் படிக்க