• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 22ம் தேதி அனைத்து கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு…

March 20, 2020

வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
“உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது.கொரோனா வைரஸை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவிற்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது முக்கியம். வரும் 22-ஆம் தேதி அன்று அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர, மற்ற யாரும் வெளியில் வர வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 22-ஆம் தேதி அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க