• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியா தொழில் அதிபர்களை தொழில் தொடங்க அழைப்பு

October 15, 2016 தண்டோரா குழு

தொழில் அனுபவம் குறித்த மூன்றுநாள் சிறப்பு நிகழ்ச்சி கோவையில் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 12) தொடங்கி, சனிக்கிழமை (அக்டோபர் 15) நிறைவடைந்தது.

“தொழில்முனைவோர் அமைப்பு” (Entrepreneurs’ organisation) என்ற உலகளாவிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய தொழிலதிபர்கள் கோயம்புத்தூரில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பட்டதுடன், உள்ளூர் தொழில்கள் குறித்த அனுபவம் பெற உதவும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த தொழில் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்தை சேர்ந்த 50 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழில்அதிபர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு கோவையில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகள், தங்க நகை பட்டறைகள், ஆட்டோ ஹரன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பாரம்பரிய உணவு முறை, கோவையின் பிரசித்தி பெற்ற பல்வேறு இடங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் அழைத்து சென்று அனுபவம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவ பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆஸ்திரேலியா தொழில் அதிபர்களுக்கு நம் நாட்டின் கலாசாரம் , தொழில் செய்யும் உத்திகள் போன்றவற்றை அறிய செய்யவே இது போன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். இதன் மூலம் நம் நாட்டுத் தொழில் அதிபர்களுடன் அவர்கள் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக அவர்கள் நம் நாட்டில், குறிப்பாக கோவையில் பல நூறு கோடி முதலீட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் கோவையில் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது. அதே போல் நம் நாட்டு தொழில் அதிபர்களும் கோவையின் சிறப்பு குறித்து அறிந்தார்கள் அவர்களும் இங்கு முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

இது குறித்து ஆஸ்திரேலியா தொழில் அதிபர் ஜஸ்டின் போய்லன் கூறியதாவது:

இந்தியா மிகவும் அற்புதமான நாடு. மூன்று நாட்கள் கோவையைச் சுற்றிப் பார்த்தேன். அதன் அனுபவம் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள தொழிற்சாலைகள் மிகவும் சிறப்பாக இயங்குகின்றன.

தொழில்களின் வடிவமைப்பு, அணுகுமுறை போன்றவை புதிதாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து இங்குள்ள தொழில் முனைவோர் மூலம் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய முடிவு செய்துள்ளேன்.

நான் மட்டுமின்றி என் நண்பர்கள் பலரையும் இணைத்து கோவையில் தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளேன் இது குறித்து விரைவில் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியை ஒட்டி, கோவையில் உள்ள தனியார் விடுதியில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் இது போன்ற நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற தொழில் துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க