• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

March 19, 2020 தண்டோரா குழு

கோவையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவையில் கடந்த 4 ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டார். இவரை தாக்கியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதோ போல 5ம் தேதி அதிகாலைஇந்து முன்னணி பிரமுகர் ஆனந்தை தாக்கியதற்கு எதிர்வினையாக கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பை சேர்ந்த அகில், பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்திரவினை சிறையில் மாநகர காவல் துறையினர் அளித்தனர்.

மேலும் படிக்க