• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா வைரஸ்: அஜித், சிம்பு திரைப்படங்களின் படப்பிடிப்பு ரத்து!

March 16, 2020

கொரோனா வைரஸ் காரணமாக அஜித் நடிக்கும் வலிமை மட்டும் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 80க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் காரணமாக சினிமா படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ரமோஜி ஃபில்ம் சிட்டியில் நடைபெற்றது வருகிறது. அதே போல சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை படபிடிப்பு பணிகள் நிறுத்தப்படுவதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

இதே போல கொரோனா வைரஸ் காரணமாக ரஜினி நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த படத்தின் படபிடிப்பு பணிகளும் கார்த்தியின் சுல்தான், கமலின் இந்தியன் 2, விக்ரம் நடித்து வந்த கோப்ரா திரைப்படத்தின் படபிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டது. படபிடிப்பு மட்டும் அல்லாமல் கொரோனா வைரசால் திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க