• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கான பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன் – அருண் விஜய்

February 23, 2020 தண்டோரா குழு

எனக்கான பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்
– அருண் விஜய்

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதோடு தமக்கென உள்ள பாணியில் தொடர விரும்புவதாக பிரபல நடிகர் அருண் விஜய் கோவையில் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் 16 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய “மாஃபியா – பாகம் 1” படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் அருண் விஜய் கோவையில் படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சழ்தித்து பேசினார்.

அப்போது அவர்,

Lyca Productions சார்பில் தயாரித்த இந்த படத்தை வெற்றிபடமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.முழு நீள காமெடி படத்தில் நடிக்கும் எண்ணம் குறித்த கேள்விக்கு நல்ல குடும்ப கதை மற்றும் காமெடி கதைகள் அமைந்தால் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் தமக்கென்று தற்போது உருவாகியுள்ள இந்த ஸ்டைலை தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மல்ட்டி ஸ்டார் படங்களில் மீண்டும் நடிப்பது குறித்த கேள்விக்கு நல்ல கதையம்சம் இருந்தால் நடிப்பதில் தவறில்லை எனவும் அதே நேரத்தில் தமக்கென உள்ள பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதையும் தொடர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க