• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

CAA-க்கு எதிராக கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – ஏராளமான போலீசார் குவிப்பு

February 19, 2020

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும் மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் விட்டவாறு ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து கோஷமிட்டனர்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் ஐந்து துணை கமிஷனர், 20 பேர் காவல்துறை ஆய்வாளர்கள் 50 பேர் உள்பட 1,500 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க