• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

February 5, 2020 தண்டோரா குழு

சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும் இப்படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிடவில்லை.இதற்கிடையில், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி இந்நிறுவத்திற்கு பணம் வழங்கிய பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம், அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக விஜய்யிடம் விசாரணை நடைபெற்றது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.மேலும், நெய்வேலி என்எல்சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க