• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

February 4, 2020

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடப்பாண்டு முதல் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பு விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5-வது மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.அவற்றை பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க