• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறை வளாகத்தில் 22 ஏக்கரில் முயல்,கோழி, மீன் வளர்க்க திட்டம்

February 1, 2020

கோவை மத்திய சிறை வளாகத்தில் 22 ஏக்கரில் துவங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தில் முயல்,கோழி, மீன் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் 1784 கைதிகள் உள்ளனர். சிறை வளாகத்தில் 2 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை வளாகம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கு மீன் வளர்ப்பு மண்புழு உரம் தயாரிப்பு முயல் தேனி கோழி மற்றும் காய்கறி உள்ளவற்றை கைதிகள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மீன் வளர்ப்புக்காக 150 அடி நீளம் 50 அடி அகலத்தில் மீன் குட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது இதில் 4 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன மீன் குட்டையை கைதிகள் பராமரித்து வருகின்றனர்.

இதுபோல் நாட்டுக்கோழி பிராய்லர் ஆகிய இரு வகைக் கோழிகளும் தனித்தனியாக வளர்க்கப்பட்டு வருகின்றன.இரு எக்கர் பயிரிடப்பட்டுள்ள காய்கறி கைதிகள் திறம்பட பராமரித்து வருகின்றனர். மூலிகை அலங்காரச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன வளாகத்தில் 12 ஆழ்துளை கிணறுகள் மூலம் பயன்பாட்டிற்கு நீர் கிடைக்கின்றது. பண்ணையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் கோழி மீன்கள் உள்ளிட்டவற்றை சிறைத்துறை பஜார் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க