• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – இரண்டு பேர் கைது

January 18, 2020

கோவையை அடுத்த அன்னூர் அருகே 12 வயது சிறுமியை சோள காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு பேர் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த அன்னூர் பெரியார் நகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பனிரெண்டு வயது சிறுமியை அங்குள்ள பகுதியில் உள்ள சோளக்காட்டில் வைத்து பழனிசாமி என்பவரது மகன் அரவிந்த் வயது 23,மற்றும் வெங்கிட்டான் என்பவரது மகன் காளிதாஸ் 26 ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக துடியலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் பலாத்காரம் செய்ய முயற்சித்த இரண்டு பேர் மீது போக்சோ சட்டபிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரனை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள காளிதாஸ் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது..சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க