• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

TNPSC குரூப் 1 தேர்வில் கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் இருவர் வெற்றி

January 10, 2020

மாவட்ட துணை ஆட்சியர், மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளருக்கான TNPSC குரூப் 1 தேர்வில் கோவை சங்கர் ஐஏஎஸ் மாணவர்கள் இருவர் வெற்றி அடைந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மிகச்சிறந்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமான சங்கர் ஐஏஎஸ் அகாடமி யுபிஎஸ்சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசின் பணியாளர் தேர்வில் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது கோவையில் செயல்பட்டு வருகின்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமி. மேலும் தமிழகத்தில் 181 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இதில் கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற எஸ்.சங்கீதா, 63வது ரேங்க் பெற்று துணைக் காவல் கண்காணிப்பாளராகவும் எஸ்.ஸ்வேதா என்ற பெண் 93வது ரேங்க் பிடித்து கூட்டுறவு சொசைட்டி துணை ரிஜிஸ்தரராக வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் வெற்றியைப் பாரட்டும் விதமாக கோவை காந்திபுரம், ராம் நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கிளைத் தலைவர் அருண், நிர்வாக இயக்குனர் யாஷ்மி அருண், மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்கள், மற்றும் உடண் பயிலும் மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவப்படுத்தினர்.

மேலும் படிக்க