• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனநலம் பாதிகப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் – முதியவர் கைது

January 8, 2020

கோவையில் மனநலம் பாதிகப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் உக்கடம் பகுதியில் 22 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 22-வயது இளம் பெண்ணின் பெற்றோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் பரிசோதனையில் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியில் வசித்து வரும் முகமது அசன் என்ற முதியவர், உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். இவர் அந்த இளம்பெண்ணின் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கடந்த சில மாதங்களாக பாலியம் பலாத்காரம் செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து முகமது அசனை கைது செய்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நேற்றிரவு சிறையில் அடைத்தனர். இதுபோல் குழந்தைகள், மற்றும் பெண்களுக்கான பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுவோர்களை காலம் தாழ்த்தாமல் கடுமையான சட்டம்கொண்டு தண்டிக்கப்படவேண்டும் .அப்பொழுதுதான் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருவதை தடுக்கவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாகவும் உள்ளது.

மேலும் படிக்க