• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் பறிமுதல்

January 3, 2020

கோவை விமான நிலையத்தில் சிங்கபூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரளாவை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஸ்கார்ட் ஏர் லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கேரளா திருசூரை சேர்ந்த அபீஸ் என்ற வாலிபரை பிடித்து சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட ரூ10.65 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதே போல் மற்றொரு கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரீதின் ஏண்டோ என்ற வாலிபரிடம் சோதனையிட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.10.80 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்தும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க