• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி குளங்களுக்கு மட்டும்தானா ! பேருந்து நிறுத்ததிற்க்கு இல்லையா பொதுமக்கள் வேதனை

December 28, 2019 தண்டோரா குழு

கோவையில் மத்திய அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவை மாநகராட்சி செயல்படுத்திக் கொண்டுவருகிறது.

இந்த திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் நல்ல முறையில் நடைமுறைபடுத்தி செயல்படுத்தி வருகிறது குறிப்பாக இத்திட்டங்களில் குளங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அழகுபடுத்துவதிலே மாநகராட்சி நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. தெரு விளக்குகளை சீர்படுத்துவது ரோடுகளை அழகுபடுத்துவது,என்ற பல்வேறு திட்டங்கள் இருந்தபோதிலும் இத்திட்டங்களை மாநராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை
குறிப்பாக கோவையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கொங்கு மண்டலத்தில் ஒரு முக்கியமான மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள் நோயாளிகள் மட்டும் 2,000 பேரும் தினமும் வந்து செல்லுகின்றனர் வெளிநோயாளிகளாக 5000 பேரும் முதல்7,000 பேர் தினமும் வந்து செல்கிறார்கள் ,இதில் நோயாளியுடன் வரும் உறவினர்கள் நண்பர்கள் கணக்கில் சேர்த்தால் ஏறக்குறைய 15,000 முதல் 20,000 பேர் தினமும் வந்து செல்கின்றனர்.

ஆனால் வாகன வசதிகள் இல்லாதவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளையே நம்பி வருகின்றனர்.ஆனால் இந்த மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள பேருந்து நிறுத்தம்
மிக மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது.பயணிகள் மற்றும் நோயாளிகள் இருக்க சீட்டு இல்லாமல் கம்பியில் மேல் உட்காரும் அவலநிலையில் செயல் பட்டு வருகிறது.தங்கள் பயணத்திற்காக பேருந்தை எதிர்நோக்கி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் பொதுமக்கள் ஆனால் அவர்கள் உட்காருவதற்கு சரியான இருக்கை இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்துவிட்டு செல்வதால் அங்கும் பொதுமக்கள் நிற்க்கமுடியாதல் சூழல் உள்ளது மேலும் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடும் ஆகிறது தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மிக முக்கியமான பகுதியான கோவை அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் எந்த விதமான அடிபடை வசதிகளையும் செய்யாமல் இதன் அருகிலே அமைந்துள்ள குளங்களை தூர்வாரி சுத்தபடுத்தி பொதுமக்கள் அமருவற்கான நவின முறையில் இருக்கை செய்து வரும் கோவை மாகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர். சமுக ஆர்வலர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள பேருந்து நிறுத்தை சரிசெய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தையும்,மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க