• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

December 27, 2019 தண்டோரா குழு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்களின் கூட்டு கமிட்டி சார்பில் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாலையில் 30க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் மேற்கொண்டனர்.கூட்டு கமிட்டி சார்பில் கோவை மண்டலத்தில் 19 போக்குவரத்து பணிமனைகளில் இந்த மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறுவதாகவும்,தொடர்ச்சியாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பங்களிப்பு இருக்கும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க