• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூரிய கிரகணதன்று உணவருந்தி மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு

December 26, 2019 தண்டோரா குழு

சூரிய கிரகணத்தன்று உணவருந்த கூடாது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் 50க்கும் மேற்பட்டோர் காலை உணவு அருந்தினர்.

இன்று இந்தியா முழுவதும் வளைய சூரிய கிரகணம் வானில் தென்பட்டது.இந்த கிரகணத்தை காண பல இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய கிரகணம் ஆனது ஒரு அரிய நிகழ்வு என்றும் அனைவரும் இதை பாதுகாப்புடன் காணவேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் ஆய்வுகள் பல இருந்தாலும் இன்றும் பல கிராமங்களில் பல மக்களிடையில் மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன. கிரகணத்தன்று கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்தக்கூடாது குழந்தைகள் யாரும் வெளியே வந்து விளையாடக்கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் பரவியுள்ளன. இந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 50க்கும் மேற்பட்டோர் மூடநம்பிக்கைகளை எதிர்க்கின்ற வகையில் காலை உணவு அருந்தினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் செயலாளர் கு.இராமகிருட்டிணன்,

இந்த சூரிய கிரகணம் ஆனது அறிவியல் முறைப்படி மிகவும் வியக்கத்தக்க ஒன்று. ஆனால் அதை சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அதை ஓர் தீய நிகழ்வு என்பது போல் மக்களிடையே சித்தரித்துள்ளனர்.இதைப்பற்றி மூடநம்பிக்கைகள் பலவற்றை மக்களிடையே கூறி மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கடித்து உள்ளன.சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்தக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் மக்களிடம் பரவலாக இருந்து வருகின்றன.ஆன்மீக ரீதியில் பார்த்தால் கடவுளே இல்லை என்றால் ஒரு அணுவும் அசையாது என்று பலர் கூறும் நிலையில் இந்த சூரிய கிரகணத்தை அன்று கடவுளுக்கே ஆபத்து என்று கூறுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது என கேள்வி எழுப்பினார். மேலும்,இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கின்ற வகையில் இன்று சூரிய கிரகணம் நடக்கும் போதே உணவருந்தி மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவித்தார்.

மேலும் படிக்க