• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் அணிக்கு திரும்பிய தவான்,பும்ரா இலங்கை, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

December 24, 2019 தண்டோரா குழு

இந்திய அணி இலங்கைக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டிகளில் விராட் கோலி தலைமையில் ஆடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில் காயத்தால் கடந்த 2 தொடர்களில் விளையாடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பூரண குணமடைந்திருப்பதால், அணிக்கு மீண்டும் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் காயம் காரணமாக ஓய்வில் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவனும் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதுபோல் கேரள விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் நீடிக்கிறார். இரு தொடர்களிலும் மகேந்திர சிங் தோனிக்கு இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி

விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், வாஷிங்டன் பிரீத் சுந்தர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணி

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதிவ் ஷார்டுல் தாக்கூர், ஷமி.

மேலும் படிக்க