• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறமால் தடுக்க கோவையில் மகா பிரபஞ்ச யாகம்

December 23, 2019

பலநூறாண்டுகளிக்கு பிறகு தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்று இணைவதால், உலகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறமால் தடுக்க கரூர் சணப்பிரட்டி எஸ்.ஆர்.எம் மஹாலில், மகா பிரபஞ்ச யாகம் வரும் டிசம்பர் 25ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோதிடர் தினேஷ் கூறுகையில்,

6 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் சேர உள்ளது. எனவே மக்கள் மத்தியில் அமைதியின்மை, கஷ்டம், நாடு அமைதியில்லாத சூழல் ஏற்படும்.மன்னர் ஆட்சி காலத்தில் மக்கள் நலன் வேண்டி தொடர்ந்து யாகங்கள் நடத்தப்படும். இப்போது அது நடைமுறையில்லாமல் உள்ளது. எனவே உலக நலன் வேண்டி, தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள கரூரில் யாகத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஜோதிட பிரபஞ்ச குழு நடத்தும் இந்த யாகத்திற்கு பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பு ஆலோசனைகளை வழங்கி இணைந்து நடத்த ஆதரவு அளித்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யாகத்தில் பங்கேற்க உள்ளனர் என்றனர். பேட்டியின் போது பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் முத்துசாமி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க